மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உதவியாளர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். இதில் 200க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் கலந்துகொண்டனர். மாநில துணைத்தலைவர் மாரியப்பன், "திமுக அரசு எங்களுக்கு வாக்குறுதி அளித்து நாமம் போட்டுவிட்டது. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தேர்தல் பணிகளைப் புறக்கணிப்போம்" என்றார்.