ராசியான வண்டிக்கு ரூ.10,000 சன்மானம்

மதுரை மாநகர் பைபாஸ் ரோடு பகுதியில் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தபோது மர்ம நபர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை இருசக்கர வாகனத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் வாலிபர் அந்த வண்டி மிகவும் ராசியானது என்பதால் தன்னுடைய ஹீரோ ஹோண்டா வண்டியை கண்டுபிடித்து தருபவருக்கு பத்தாயிரம் சன்மானம் வழங்கப்படும் என வண்டியின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து மதுரை மாநகர் முழுவதும் ஒட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி