மதுரை திருப்பரங்குன்றம் அருகே ஹார்விபட்டி மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை, பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் இருப்பதால் அதை அகற்றக் கோரி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இந்தக் கடையில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக விற்பனை செய்வதாகவும், இது குறித்து கேட்டால் மேற்பார்வையாளர் முருகன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் மது பிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.