திருப்பரங்குன்றம்: மீண்டும் டாஸ்மாக் கடை திறப்பு; விற்பனை அமோகம்

திருப்பரங்குன்றம் பாலத்தின் கீழ், காவல் நிலையம் அருகே மூட உத்தரவிடப்பட்ட மூன்று மதுபான கடைகளில் ஒரு கடை மட்டும் ஒரு நாள் மூடப்பட்டு, தற்போது மூன்று நாட்களாக திறந்தே விற்பனை நடைபெற்று வந்தது. பார் உரிமையாளர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்ததால் அவருக்கு சலுகை வழங்கப்படுவதாக அப்பகுதியில் பேச்சு நிலவியது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா என மக்கள் கேள்வி எழுப்பினர். டாஸ்மாக் மாவட்ட மேலாளரின் உத்தரவின் பேரில் இன்று (மே 30) அந்தக் கடை மீண்டும் மூடப்பட்டது.

தொடர்புடைய செய்தி