அப்போது கிழக்கு ஒன்றிய அதிகாரிகளை அழைத்த மாவட்ட ஆட்சியர் த.வெ. கவினர் அளித்த இந்த புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீரை கால்வாயை தூர்வார உத்தரவிட்டார். இதனையடுத்து 24 மணி நேரத்தில் ஆட்சியரின் அதிரடியான நடவடிக்கையை தொடர்ந்து மீனாட்சிநகர், அப்துல்கலாம் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்பட்டு கழிவுநீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது குறித்து ACTION - REACTION என தவெக மனு அளித்தது குறித்தும், நடவடிக்கை எடுத்தது குறித்தும் தவெகவினர் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்