மதுரை முதலைக்குளம் 18 படியான் கருப்புசாமி கபடி குழு ஜல்லிக்கட்டு பேரவை இளைஞர் மன்றம் சார்பில் செல்லம்பட்டி நடுமுதலை குளத்தில் மாநில கபடி போட்டி நடந்தது.
திறந்தநிலையில் நடந்த போட்டியில் 200 அணிகள் பங்கேற்றன.
மகளிர் பிரிவில் அமெரிக்கன் கல்லூரி முதல் பரிசு வென்றது, லேடி டோக் கல்லூரி 2ம் பரிசு, பாத்திமா கல்லூரி 3ம் பரிசு, மீனாட்சி அரசு கல்லூரி 4ம் பரிசு மதுரை கல்லூரி 5ம் பரிசு பெற்றது.