மதுரை: முன்னாள் மேயர் திருவுருவச் சிலையை திறந்து வைத்த ஸ்டாலின்

மதுரை மாநகராட்சியின் முதல் மேயருமான திமுகவின் முன்னோடிகளில் ஒருவரான மதுரை எஸ். முத்துவின் வெண்கலச் சிலையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (மே 31) திறந்து வைத்தார். 

மதுரையில் இன்று (ஜூன் 1) நடைபெறவுள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று (மே 31) பிற்பகல் 1:30 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஐ.பெரியசாமி ஆகியோர் வரவேற்றனர். 

விமான நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் ஓய்வெடுத்த பின்பு, மாலை 5 மணியளவில் ரோடு ஷோ நிகழ்ச்சிக்காக மதுரை மாநகருக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளின் வழியாக பயணம் மேற்கொண்டார். இந்நிகழ்வின் நிறைவாக நரிமேடு பகுதியில் உள்ள மதுரா கோட்ஸ் முன்பாக அமைக்கப்பட்டிருந்த மதுரையின் முன்னாள் மேயர் எஸ். முத்துவின் வெண்கலச் சிலையை திறந்து வைத்தார். 

மதுரை மாநகராட்சியில் அதிக காலம் மேயராக இருந்த பெருமையைப் பெற்றவர். இவரது நினைவாக பெரியார் பேருந்து நிலையத்தையும் மதுரை கல்லூரியையும் இணைக்கும் சுப்பிரமணியபுரம் பாலத்திற்கு முத்து மேம்பாலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நேற்று (மே 31)  நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் மேயர் முத்துவின் மூத்த மகன் நல்லதம்பி, இளைய மகன் கருணாநிதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி