கால பைரவருக்கு, வடை
மாலைகள் அணிவிக்கப்பட்டு, அர்ச்சணைகள் நடந்தது. மதுரை தாசில்தார் நகர் வர
சித்தி விநாயகர் ஆலயம், கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் ஞான சித்தி விநாயகர் ஆலயம், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வர ஆலயம், சோழவந்தான் பிரளய நாத சிவன் ஆலயம், மதுரை அவனியாபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, இன்று மாலை கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து, வடமாலை அணிவிக்கப்பட்டு, அர்ச்சனைகள் நடைபெற்றது.
ஏராளமான பெண்கள் தேங்காயில் தீபம் ஏற்றி கால பைரவரை வழிபட்டனர். பக்தர்கள், கால பைரவருக்கு தயிர் சாதம் படைத்து வழிபட்டனர்.