இலங்கை சென்றால் சிங்களவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்: ஆதினம்

மதுரை: நான் தமிழீழம் கேட்பதால் இலங்கை சென்றால் சிங்களவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழர்களுக்கான தனி நாடு கேட்பேன், மோடி விபூதி அணிகிறார், தியானம் செய்கிறார், சவுதி அரேபியா செல்கிறார் அதனால் மோடியை பிடிக்கும் , இந்த தேர்தலில் தமிழக மக்கள் முடிவெடுத்தது சரியானது - மதுரை ஆதினம் பேட்டி.

மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள ஆதீனம் மடத்தில் ஹரிஹர ஶ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.


பிரதமராக மோடி பதவியேற்றமைக்கு நன்றி வாழ்த்துக்கள் ஆசிர்வாதம் எனவும், தமிழகத்தில் வெற்றி பெற்றவர்களுக்கும், தோல்வியுற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள், சீமான், அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள், தமிழக மக்கள் எல்லோருக்கும் அளந்து வாக்களித்திருக்கிறார்கள்.

ஒரே வருத்தம் இலங்கை தமிழர்களை கொன்றவர்களையும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதனால் தான் அவர்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை

மோடி இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டிகொடுத்திருக்கிறார். கச்சத்தீவை மீட்க வேண்டும், தமிழீழம் அமைக்க வேண்டும் என பிரதமரை சந்தித்து ஏற்கனவே வலியுறுத்தியுள்ளேன், மோடி மீண்டும் பிரதமர் ஆனது ரொம்ப மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்


இந்த தேர்தலில் தமிழக மக்களின் முடிவெடுத்தது சரியானது.

தொடர்புடைய செய்தி