பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவார் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு தீவிர ஆதரவாளர் விஷ்ணு பிரசாத் பரபரப்பு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார். 'சிங்கம் ஒன்று புறப்பட்டதே, அதுக்கு நல்ல காலம் பொறந்திருச்சு' என்ற திரைப்பட பாடல் வரிகளுடன் கூடிய போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. இது அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.