மின்சாரத்தால் இறந்த ஊழியர் மனைவிக்கு ரூ. 20 லட்சம் இழப்பீடு

தஞ்சை மாவட்டம் மதுக்கூரைச் சேர்ந்த பிரபா என்பவர், தனது கணவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றி வந்த நிலையில், 2021-ல் மின் கம்பம் ஊன்றும் பணியின் போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்த நிலையில், பிரபா கருணை அடிப்படையில் பணி கேட்டு மனு அளித்திருந்தார். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அவரது மனுவை நிராகரித்ததை அடுத்து, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி குமரேஷ் பாபு, மனுதாரரின் கணவர் மின்வாரியப் பணியின் போது உயிரிழந்ததை உறுதி செய்து, தமிழ்நாடு மின்சார வாரியம் மூன்று மாதங்களுக்குள் ரூ.20 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி