காய்கறி கடை அமைக்க முயன்ற சாலையோர வியாபாரிகள் கைது

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தபால் தந்தி நகர் பாமா நகர் பகுதியில் காய்கறி சந்தை கடைகள் அமைக்க அனுமதி இல்லை என 2024 மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், கடந்த இரண்டு வாரங்களாக சாலையோர வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கடைகள் அமைக்க அனுமதி கோரி போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு கடைகள் அமைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாய்களை வைத்து தடுத்ததால் வியாபாரிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் வியாபாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி