மதுரை கோ. புதூர் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில், மதுரை போக்குவரத்து காவல்துறை சார்பில் மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் அழகர்சாமி அவர்கள் தலைக்கவசம் அணியாததால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்பு பற்றியும் விளக்கினார். மேலும் மாணவர்கள் தங்களது பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் குடியிருப்புவாசிகளிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துரைக்குமாறு அறிவுறுத்தினார். "தலைக்கவசம் உயிர்க்கவசம்" "தலைக்கவசம் அணிந்து பயணம் செய்வோம்" என்று மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் ஷேக் நபி, போக்குவரத்து தலைமை காவலர் மன்மதன், மலபார் அப்துல் ரசாக், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.