இதேபோன்று, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் விரகனூர் சுற்றுச்சாலையிலிருந்து வைகையாற்றின் கரையோரங்களில் அமைக்கப்பட்ட அணுகுச்சாலைகள் வழியாக திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்கின்றன. இதனிடையே, மதுரை மாநகர் அணுகுச்சாலைகள் வழியாகச் செல்லும் வாகனங்கள் விரகனூரிலிருந்து கருப்பாயூரணி, கல்மேடு, சக்குடி வழியாக சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்குச் செல்லும் வகையில் வைகையாற்றின் வடகரையில் சுமார் 8.4 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிர்வாக அனுமதி கோரி, தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.
தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை.. 3 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்