மதுரை: திமுக மாவட்ட செயலாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

மதுரை மாநகர் மாவட்டம் தெற்குவாசல் பகுதி 53ஆவது வட்ட பொறுப்பாளராக கார்த்திகேயனுக்கு பதிலாக அசோக்பாபு நியமிக்கப்பட்டதை எதிர்த்து திமுகவினர் மாவட்ட செயலாளர் கோ. தளபதியிடம் முறையிட்டனர். அப்போது, கட்சியினரை அவதூறாக பேசியதாக கூறி, மாவட்ட செயலாளருக்கு எதிராக திமுகவினர் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தின் போது, வீடியோ பதிவு செய்தவர்களையும், மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி