காரைக்காலில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் என்ஜின் நாகை மற்றும் திருவாரூா் ரயில் நிலையங்களில் மாற்றப்பட்டு, இயக்கப்படுகிறது.
தற்போது காரைக்கால்- பேரளம் அகலப் பாதை பணி நிறைவடைந்துள்ளதால், எஞ்சினை மாற்றாமல் சென்னைக்கு ரயிலை இயக்க முடியும். பயண நேரமும் குறைய வாய்ப்பு உள்ளது.
மேலும், நாகூா் தா்கா, வேளாங்கண்ணி பேராலயம், காரைக்கால் திருநள்ளாறு சனிபகவான் கோயில் என மும்மதத்தையும் இணைக்கும் ரயில் பாதையாகும்.
எனவே, காரைக்கால்-பேரளம் ரயில் பாதை திறந்தவுடன், வேளாங்கண்ணி-சென்னை-வேளாங்கண்ணிக்கு, காரைக்கால், பேரளம் வழியாக விரைவு ரயில் இயக்க வேண்டும். ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில், திருச்சி-பாலக்காடு விரைவு ரயில், திருச்சி- திருவாருா்-திருச்சி பயணிகள் ரயில், மதுரை- புணலூா்-மதுரை விரைவு ரயில் ஆகியவற்றை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும்.
காரைக்காலில் இருந்து புறப்படும் தாம்பரம், பெங்களூா் மும்பை வாரந்திர ரயில் ஆகியவற்றை, வேளாங்கண்ணியில் இருந்து நாகை, காரைக்கால், திருநள்ளாறு வழியாக இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, சங்கத்தின் தலைவா் மோகன், செயலா் சித்திக், பொருளாளா் பாலா ஆகியோா் கடிதம் அனுப்பியுள்ளனர்.