மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் அவர்கள் தலைமையில் இன்று (18.05.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, விபத்து நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன.