மதுரை: பணியிடமாற்ற உத்தரவை திரும்பபெற கோரி போராட்டம்

மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் நத்தம் மற்றும் ஆட்சேயபனையில்லா புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் மந்த நிலை ஏற்படுவதாக ஆய்வுக்கூட்டங்களின் போது கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த 20ஆம் தேதியன்று மதுரை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் 27 கிராம நிர்வாக அலுவலர்களை பணியிட மாறுதல் செய்து உத்தரவு பிறப்பித்தார். 

இந்த பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் இன்று தங்களது பணிகளைப் புறக்கணித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியரின் வாகனத்தின் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பணியிடமாற்ற உத்தரவை திரும்ப பெற கோரி முழக்கங்களை எழுப்பினர். தங்களது கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எட்டப்படவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி