கல்குவாரியை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில், திருமங்கலம் வட்டம், பொன்னமங்கலம் கிராம மக்கள் தங்கள் பகுதியில் செயல்படும் கல் குவாரியை ஆய்வு செய்து நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரகம் முன் பொன்னமங்கலம் கிராம மக்கள் ஆா்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனா்.

தொடர்புடைய செய்தி