பொன் மாணிக்கவேல் கோரிக்கை நிராகரிப்பு; கோர்ட் அதிரடி

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ. ஜி. பொன் மாணிக்கவேல் கோரிக்கையை ஐகோர்ட் கிளை நிராகரித்தது.

சிபிஐ அலுவலகத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தக் கோரி பொன் மாணிக்கவேல் மனு தாக்கல் செய்தார். 4 வாரம் இன்னும் முழுமை அடையாததால் தற்போது நிபந்தனையை தளர்த்த முடியாது என நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணையை அக். 14ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிபிஐ பதிவு செய்த வழக்கில் பொன் மாணிக்கவேலுக்கு சென்னை சிபிஐ அலுவலகத்தில் 4 வாரம் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஐகோர்ட் கிளை முன்ஜாமீன் வழங்கியிருந்தது.

தொடர்புடைய செய்தி