தடகளப் போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற காவலருக்கு பாராட்டு

சென்னையில் நடைபெற்ற 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்-2025 போட்டிகளில் 22 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில், தமிழக காவல் துறையைச் சேர்ந்த மதுரை மாநகர தலைமை காவலர் ஜெயசந்திர பாண்டி, 40 வயதிற்கான பிரிவுகளில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தங்கப் பதக்கம், 300 மீட்டர் steeplechase போட்டியில் வெள்ளிப் பதக்கம், 400 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் மற்றும் 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அவருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி