வன்கொடுமை தடுப்பு சட்டப் புகார்கள் குறித்த மனு தள்ளுபடி

மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த மனுவில், பட்டியல் சமூக மக்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கும் புகார்களை போலீஸார் முறையாகக் கையாள்வதில்லை என்றும், இதனால் சட்டத்தின் நோக்கம் சீர்குலைவதாகவும் குற்றம் சாட்டினார். எந்தவித முதல் கட்ட விசாரணையும் இன்றி உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், சிறப்பு கண்காணிப்புப் பிரிவு உருவாக்கவும் கோரினார். ஆனால், தனிப்பட்ட சில வழக்குகளில் நடந்த தவறுகளை அடிப்படையாகக் கொண்டு பொதுவான உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், மனுதாரரின் கோரிக்கை தெளிவற்றவை என்றும் கூறி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது.

தொடர்புடைய செய்தி