ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் ரூபாய் 9ஆயிரம் ரூபாய் பஞ்சபடியுடன் வழங்கவேண்டும், பகத்சிங் கோஷியாரி கமிட்டி பரிந்துரைத்த இடைக்கால நிவாரணம் 3ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும், மறுக்கப்பட்ட ஆண்டு நிவாரணம் ROC உள்ளிட்ட சலுகைகளை திரும்ப வழங்கவேண்டும், அனைத்து பென்ஷனர்களுக்கும் ESI திட்டத்தை அமுல் படுத்த வேண்டும், உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பின்படி தகுதி உள்ள அனைவருக்கும் உயர் பென்ஷன் வழங்கவேண்டும், முதியோருக்கான இரயில்பயண சலுகை வேண்டும், திட்டச்சான்றிதல் படி பென்ஷன் வழங்கும் போது ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி நடந்து கொள்ள வேண்டும் மாநில அரசு அண்டை மாநிலங்களில் வழங்குவது போன்று EPF மூலம் பென்ஷன் பெறும் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு அக்கறையுடன் தனி பென்ஷன் வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கை அடங்கிய கோரிக்கை மனுவினை மதுரை EPF மண்டல ஆணையரிடம் மனு அளித்தனர்.
மதுரை நகரம்
மதுரையில் மாரடைப்பால் தலைமை காவலர் மரணம்