இருப்பினும் அரசியல் வருகைக்கு பின் கோட் படம் நாளை வெளியாக உள்ள நிலையில் திரையரங்குகள் முன் பிரம்மாண்ட பேனர் உள்ளிட்டவைகளை ரசிகர்கள் அமைத்து வருகின்றனர். இந்நிலையில் திரையரங்குகள் முன் கோட் படத்திற்காக பேனர்கள் வைக்கப்படுவது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளரிடம் கேட்ட போது, மதுரை மாநகராட்சியிடம் அனுமதியில்லாமல் பேனர்கள் வைக்கக்கூடாது. சாலைகளில், பொதுமக்களுக்கு இடையூராக பேனர் வைக்க அனுமதி தரக்கூடாது என உயர்நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.
பேனர் வைக்கப்படுவது குறித்து உரிய ஆலோசனைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் என மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் இன்று (செப்.4) தகவல் தெரிவித்துள்ளார்.