நீட் வேண்டாம் என்பதுதான் எங்கள் நோக்கம். அமைச்சர் பேட்டி.

சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், பழைய திட்டங்கள் தொடரும் என்றும், கடந்த ஆட்சியில் 400 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாகவும், அது விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மதுக்கடைகள் படிப்படியாக மூட முயற்சி எடுக்கப்படும் என்றும், நீட் தேர்வை மத்திய அரசால் கூட சரியாக நடத்த முடியவில்லை என்றும், நீட் வேண்டாம் என்பதே தங்கள் நோக்கம் என்றும் கூறினார். டாஸ்மாக் நேரம் குறித்து முதல்வர் முடிவு எடுப்பார் என்றும், யாருக்கு எந்த இலாகா என விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் எடப்பாடி சந்திக்காதது குறித்து கேட்ட கேள்விக்கு, ஒரு சிலரை ஒரு சில நேரத்தில் சந்தித்தால் சரியாக இருக்காது என்றார்.

தொடர்புடைய செய்தி