இணைய வழி நடைசீட்டு; மதுரை ஆட்சியர் சங்கீதா

மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர்களில் The Tamil Nadu Prevention of Illegal Mining Transportation and Storage of Minerals and Mineral Dealers Rules, 2011-ன் படி தயாரிப்பு மணல் (M-Sand) மற்றும் ஜல்லி ஆகியவற்றை (Storing. & Selling) சேமிப்பு (ம) விற்பனை நிலையம் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும். 

மேலும், வாகனத்தில் ஏற்றிச் செல்லும் M-Sand மற்றும் ஜல்லி ஆகியவற்றிக்கு இணையவழியில் நடைசீட்டு (TRANSIT PASS) வழங்கும் முறை வருகின்ற ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதனடிப்படையில், www.mimas.tn.gov.in என்ற இணையதள முகவரியில் குவாரியிலிருந்து எடுத்துச் செல்லும் கனிமத்திற்கான e-நடைசீட்டினை இணையத்தில் ஒப்படைப்பு செய்து M-Sand மற்றும் ஜல்லி-க்கான இலவச TRANSIT PASS-ஐ பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. 

மேலும், தகவலுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகத்தில் செயல்பட்டு வரும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி