மதுரை: அரசுப் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழப்பு‌

மதுரை பனகல் சாலை அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே வெள்ளிக்கிழமை சாலையைக் கடக்க முயன்ற அடையாளம் தெரியாத நபர், அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா். சுமார் 55 வயது மதிக்கத்தக்க அந்த நபர், வலது கால் முட்டி மற்றும் முன்னங்கையில் பழைய காயத் தழும்புகளுடன், சிவப்பு நிற அரைக்கால் ஆடை அணிந்திருந்தாா். இதுகுறித்து மதுரை மாநகரப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி