எனினும், தமிழ் மொழி உலகளவில் பேச்சளவிலும், எழுத்தளவிலும் நெடுங்காலமாக நிலைத்து நிற்கிறது; தமிழின் பெருமையை யாராலும் அழிக்க முடியாது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளுக்கும் வேறொரு தோற்றுவாய் என்றே ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
இந்த ஆராய்ச்சிகள் அனைத்திற்கும் ஆணித்தரமான ஆதாரங்கள் எதுவுமில்லை. பெரும்பாலும் மேலைநாட்டு அறிஞர்களின் கோட்பாடுகளே ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. தங்கள் திரைப்படங்களை அண்டை மாநிலங்களில் ஓட்ட முடியாத போது அந்த மொழி மக்களிடம் மன்னிப்பு கேட்பதுதானே தமிழக திரை நடிகர்களின் இயல்பு!
கன்னட மொழிக் குறித்த கமல்ஹாசன் பேச்சு அர்த்தமற்றது; அவசியமற்றது. அவரது பேச்சு இரு மாநில மக்கள் பிரச்சினையாக வெடித்து விடக் கூடாது. நடிகர் கமல்ஹாசன் அம்மாநில மக்களிடம் மன்னிப்பு கேட்டு, பிரச்சினைக்கு பகிரங்க முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.