மதுரை தல்லாகுளம் அருகே அதிநவீன உணவு பகுப்பாய்வு பிரிவில் புதிய நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார். ஆட்சியர் பிரவீன் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அமைச்சர் ஆய்வுக்கூடத்தின் செயல்பாடுகளைப் பார்வையிட்டார். உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் மக்கள் நல்வாழ்விற்காக இந்த நவீன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.