மதுரை கூடல் புதூரில் டெய்லராக பணிபுரியும் ஜெயலட்சுமி, தனது பேரன் பேத்தியுடன் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரிடமிருந்த பணப்பையை பறித்துச் சென்றனர். கீழே விழுந்த ஜெயலட்சுமி கூச்சலிட்டதால், பணப்பையை தூக்கி எறிந்துவிட்டு தப்ப முயன்ற மர்ம நபர்கள், எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் மோதி கீழே விழுந்தனர். பொதுமக்கள் வருவதைக் கண்ட அவர்கள், பணப்பையை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.