மதுரை உசிலம்பட்டி, மேலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்து வருகை தந்த ஏராளமான தாய்மார்கள் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், ஏற்கனவே அளிக்கப்பட்ட அனுமதிப் பட்டாக்களுக்கு இடத்தை அளப்பது, இ-பட்டா வழங்க வேண்டும், மகளிர் உரிமைத் தொகை வேண்டியும் தங்களது பச்சிளம் குழந்தைகளை கைகளில் ஏந்தியபடி மனுக்களோடு வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் குழந்தைகள் அழுகும் போது அவர்களுக்கு பாலூட்டுவதை கூட தாய்மார்கள் தவிர்க்கும் நிலை ஏற்பட்டது.
எனவே இதுபோன்ற சூழலில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்க வேண்டும் எனவும் மனு பதிவு செய்யும் இடத்தில் மின்விசிறிகள் வசதி ஏற்படுத்தித் தருவதோடு முதியவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் வரக்கூடிய தாய்மார்கள் அமர்வதற்கான இருக்கைகள் ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.