பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மிதிவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று இலவச மிதிவண்டிகளை எம்எல்ஏ வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பின்படி தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியானது மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு மதிவண்டிகளை பூமிநாதன் எம்எல்ஏ வழங்கினார்.

இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் செல்வி கார்மேகம், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். முனியசாமி, அவைத்தலைவர் சுப்பையா, பள்ளி தாளாள‌ர், தலைமை ஆசிரியர், மாநில தொண்டரணி து. செயலாளர் பா. பச்சமுத்து, பகுதி செயலாளர் T. M. கோவிந்தன் ஆசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி