மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, கோயில் திருவிழாவிற்கு வந்த 7 வயது சிறுவன் சண்முகவேல் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனார். பின்னர், அதே பகுதியில் நின்ற காரில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பேரையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிறுவன் கொலை செய்யப்பட்டாரா அல்லது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.