எரிபொருள் விற்பனை நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்.

மதுரை மாவட்டம், எல்லீஸ் நகர் போக்குவரத்து பணிமனை அருகில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் இணைந்து நடத்திய டீசல், பெட்ரோல், CNG எரிபொருள் விற்பனை நிலையத்தை தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தனர். மேலும், 67 புதிய புறநகர் பேருந்துகள் சேவையையும் அமைச்சர்கள் கொடியசைத்துத் துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், துணை மேயர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி