நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர். பழனிவேல் தியாகராஜன் , 193 மாணவ மாணவியர்களுக்கு, தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளையும், பள்ளிக் குழந்தைகளுக்கு, இலவச சீருடைகளையும் வழங்கினார்.
தொடர்ந்து, தகவல் தொழில்
நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தெரிவிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான இந்த திராவிட மாடல் அரசு கல்வி வளர்ச்சிக்கும், சுகாதார மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் வழங்கி தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குழந்தைகள் கல்வி கற்பதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் முதலமைச்சரின் காலை
உணவுத் திட்டம், சத்துணவுத் திட்டம், இலவச மிதிவண்டிகள் திட்டம், கல்வி கற்பதற்கு ஊக்கத்தொகை போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
இன்றைக்கு 193 மாணவ மாணவிகளுக்கு மிதி
வண்டகளும், 495 மாணவர்களுக்கு சீருடைகளும் வழங்கப்
படுகிறது என, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.