மெட்ரோ ரயில்; அரசு கடிதத்தை அறிக்கையாக வெளியிட வேண்டும்

மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பாக மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. 20 லட்சம் மக்களுக்கு மேல் பயன்படும் திட்டங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும், திட்டத்திற்கு இன்னும் சில விவரங்கள் தேவைப்படுவதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கையை மத்திய அரசு கடந்த 14ஆம் தேதி அனுப்பிய நிலையில், தமிழக அரசு அதை தாமதப்படுத்தி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்புக்கு முன்தினம் வெளியிட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார், இந்த மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்த மத்திய அரசின் கடிதத்தை முழு அறிக்கையாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி