சென்னையில் இருந்து மதுரை வந்த ரயிலில் பெண் பயணி ஒருவரிடம் இருந்த கைப்பையை திருடி தப்பிய நபர் கைது செய்யப்பட்டார். அந்தப் பையில் லேப்டாப், செல்போன் மற்றும் பணம் இருந்தன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த மோகனமூர்த்தி என்பவர் குற்றச்செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றை மீட்டனர்.