மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள முக்தீஸ்வரர் திருக்கோவிலில் மகா சிவராத்திரி பெருவிழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 6:00 மணி வரை விடிய விடிய சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முக்தீஸ்வரர் மரகதவல்லி தாயார் திருக்கோயிலில் நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நான்கு காலபூஜைகளின் போது விரமிருந்த பக்தர்கள் சிவாயநமஹ என்ற நாமத்தை போற்றியபடி கண்விழித்து சிவபுராணமும், பாராயணமும், தேவாரம், திருவாசகம் பாடியபடி வணங்கினர்.