மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா பிப்ரவரி 15-ஆம் தேதி இரவு தொடங்கி 16-ஆம் தேதி அதிகாலை வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் நான்கு கால அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். பக்தர்கள் அபிஷேகப் பொருட்களான பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்டவற்றை பிப்ரவரி 15-ஆம் தேதி மாலைக்குள் கோவில் அலுவலகத்தில் வழங்கலாம். மேலும், திருவாதவூர் திருமறைநாதர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில் உள்ளிட்ட ஒன்பது உபகோவில்களிலும் சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழா நடைபெறும் இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

தொடர்புடைய செய்தி