மதுரை: கலெக்டர் ஆபீஸ் உள்ளே பைக் ஓட்டிச் சென்ற இளைஞர்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சறுக்கு பாதையில், வடக்கு சார் உதவி கருவூல அலுவலகத்திற்கு பத்திரங்களை ஏற்றிச் சென்ற இளைஞர் ஒருவர் பைக்கில் வேகமாகச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டிய பாதையில் இளைஞர் பைக்கில் சென்றது குறித்தும், இது குறித்து அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

தொடர்புடைய செய்தி