இந்நிலையில் நேற்று (அக் 5) இரவு பணி முடித்துவிட்டு செல்லூர் மேம்பாலத்திற்கு கீழ் குட்டை அஜித் நின்று கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த கும்பல் அவருடன் வாக்குவாதம் முற்றி அஜித்தின் தலையில் கல்லை போட்டு தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்து அஜித் ரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் அந்த கும்பல் தப்பியோடியுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்லூர் காவல்துறையினர் அஜித்தை மீட்டபோது அவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து கொலை சம்பவம் நடைபெற்ற பகுதியில் மோப்பநாய் உதவியுடன், தடயவியல் நிபுணர்கள் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.
மேலும் கொலை நடைபெற்ற சம்பவ இடத்தில் காவல்துறை துணை ஆணையர் மதுக்குமாரி தலைமையிலான தனிப்படையினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்டாரா? இல்லை வேறு ஏதும் காரணமா? என காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.