மதுரை எம். கே. புரத்தை சேர்ந்த முத்துமணி போஸ் (34) என்பவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், நேற்று இரவு எம். கே. புரம் பகுதியில் மதுபான கடையில் மது அருந்தும்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஒரு இளைஞர் தனது நண்பர்களுடன் சேர்ந்து முத்துமணி போஸை ஓட ஓட விரட்டி, தலையில் கல்லை போட்டு கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த முத்துமணி போஸ் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.