இந்நிலையில், சம்பவத்தன்று காலை அங்குள்ள ஆடிட்டோ ரியத்தின் மாடியில் இருந்து சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென கீழே குதித்தார். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தொடர்ந்து படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மதுரை வடக்கு கிராம நிர்வாக அலுவலர் அபிராமி தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டவர் யார்? என்ன காரணத்திற்காக அந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.