இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த 10 பேர் ஒரு குழுவாக இணைந்து இந்தத் திட்டத்தில் பயன் பெறலாம். ஒரு சலவையகம் அமைக்க ரூ. 3 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும். குழு உறுப்பினர்கள் குறைந்தபட்சம் 20 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களைக் கொண்ட குழுவுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் 10 பேரைக் கொண்ட ஒரு குழுவாக இருக்க வேண்டும். குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ. ஒரு லட்சத்துக்கும் மிகாமலிருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் பயன்பெற ஆர்வமும், சலவைத் தொழிலில் முன் அனுபவமும் கொண்டவர்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து விண்ணப்பங்களைப் பெற்று, பூர்த்தி செய்து வரும் 30-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.