இந்நிலையில் அரசு சார்பில் அமைய உள்ள சிப்காட் பணியினை துரிதப்படுத்தக் கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசினை வலியுறுத்தி பூதமங்கலம், கொடுக்கம்பட்டி ஆகிய கிராம ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பூதமங்கலத்தைச் சேர்ந்த சசிக்குமார், "சிப்காட் அமையுள்ள இடம் கடைமடை பகுதி என்பதால் 5 வருடத்திற்கு ஒருமுறை தான் விவசாயம் செய்ய இயலும். விவசாயம் பெருமளவில் இல்லாத காரணத்தினால் இங்குள்ள கிராம மக்கள் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புலம்பெயர்ந்து சென்று விட்டார்கள். 99 சதவீத மக்கள் வர வேண்டும் என்று தான் எதிர்பார்க்கின்றனர். எனவே இந்த அரசு பணியை துரிதப்படுத்த வேண்டும்" என்றார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்