இதனையடுத்து 100க்கு போன் செய்து புகார் அளிப்பேன் என வீடியோ பதிவு செய்த நபர் கூறுவதும் நீ எங்கு வேண்டுமானாலும் சொல்லிக்கொள் என கூறியபடி அந்த நபர் பெண் காவலரை தனது பைக்கில் அழைத்துசெல்கிறார்.
அப்போது இவரைப் போன்ற கணவனோடு வாழ்வதற்கு சும்மாவே இருந்துவிடலாம் என கூறும் அந்த இளைஞர் இந்த வீடியோவை தனது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பெண்காவலருடன் வாக்குவாதம் செய்த நபர் அவருடைய கணவராக இருக்கலாம் என தெரியவரும் நிலையில் இதுபோன்ற வீடியோவை பதிவுசெய்து காவல்துறையினரிடம் புகார் அளிக்காமல் தனது முகநூல் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளதால் பெண் காவலர் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை உருவாகும் என பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.