மதுரை மண்டேலா நகரில் பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆய்வு செய்தார். முன்னதாக, மதுர விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பியூஷ் கோயல், திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்ற திமுக அரசு பாரபட்சமாக நடந்துகொள்கிறது. மலை மீது தீபம் ஏற்றாதது அவமானம். திமுக அரசு தமிழக மக்களின் கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் இறையாண்மையையும் கெடுத்துவிட்டது என குற்றம்சாட்டினார். மேலும், தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி மீண்டும் வரும் என்றார்.