மதுரை: டிரான்ஸ்பார்மர் ஊழல் சிபிஐயிடம் ஒப்படைப்பு.. அமைச்சர் நிர்மல் குமார்

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார், உசிலம்பட்டி அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். டிரான்ஸ்பார்மர் ஊழல் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். திருப்பரங்குன்றம் தொகுதியில் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி