பனாரஸிலிருந்து டிசம்பர் 29 அன்று புறப்பட வேண்டிய கன்னியாகுமரி தமிழ்ச்சங்கம் விரைவு ரயில் (16368) நாகர்கோவில் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து டிசம்பர் 28, 31 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கோயம்புத்தூர் மற்றும் நாகர்கோவில் பகல் நேர விரைவு ரயில்கள் (16321/16322) ஆகியவை மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பயணிகளின் வசதிக்காக இந்த ரயில்கள் வழக்கமான பாதையில் இயக்கப்படும்.
மேலும் சென்னை எழும்பூர் மற்றும் மதுரையிலிருந்து டிசம்பர் 28, 31 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை மற்றும் சென்னை எழும்பூர் தேஜாஸ் விரைவு ரயில்கள் (22671/22672) திருச்சி - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு திருச்சி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயில்கள் வழக்கம் போல மதுரை வரை இயக்கப்படும்.