மதுரை மாவட்டம் மேலூர் அருகே வடக்குவலையப்பட்டி கிராமத்தில் அரசு பேருந்து சிறுமி மீது பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பூவலிங்கம் - சினேகா தம்பதியின் 3 வயது மகள் சபூவரசி உயிரிழந்தார். ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் கவனக்குறைவால் விபத்து நேரிட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டி, குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.